• Breaking News

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு; அரசு ஊழியருக்கு குண்டாஸ்

    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில், கைது செய்யப்பட்ட துறை ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

    அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. 1,058 காலிபணியிடங்களுக்கு 1,22,000 பேர் தேர்வு எழுதினர்.

    இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, பலருக்கும் மதிப்பெண் வித்தியாசம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 200க்கும் மேற்பட்டோர்க்கு விடைத்தாள் மதிப்பெண்ணை விட கூடுதலாக இருந்ததால், தேர்வு வாரியம் கவனத்திற்கு சென்றது.

    இதையடுத்து, தேர்வு வாரியம் நடத்திய அதிரடி விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கூடுதல் மதிப்பெண்ணுக்காக 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    No comments

    அரசானைகள்

    Post Bottom Ad

    ad728